|
Post by Amritha Varshini on Apr 14, 2024 16:44:32 GMT 5.5
உ
ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல் பங்குனி அனுஷம் (30.03.2024)
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
ராகம் - லதாங்கி ; ஆதி தாளம்
பல்லவி
பத்ம பாதம் பணிந்தேன் அனுதினம் அனுஷத்தின் அனுக்ரஹம் பெற்றிட
அனுபல்லவி
ஈரேழு புவனங்கள் படைத்தவரின் ஈரேழில் துறவு கொண்டவரின் புனித
( பத்ம பாதம் )
சரணம்
குருவினை போற்றிடும் தமிழ் தருவாய் இருவினை களையும் அறம் தருவாய் தடைகள் தகர்த்து தயை புரிவாய் அல்லல் அறுத்து அருள் புரிவாய்
( பத்ம பாதம் )
கண் மலர்ந்து எமை நோக்கிடுவாய் தண்கதிர் நாளும் பொழிந்திடுவாய் தண்மலர் தூவி வணங்கிடுவேன் மண்ணில் நல்வாழ்வு தந்திடுவாய்
( பத்ம பாதம் )
|
|