|
Post by Amritha Varshini on Apr 7, 2024 4:56:32 GMT 5.5
உ
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் இசையமைத்துப் பாடியவர் - திருமதி உமா சங்கமேஸ்வரன்
ராகம் – கரஹரப்ரியா
பல்லவி
ரமண மணம் கமழும் அருண மலை மரண பயம் நீக்கும் திருவண்ணாமலை
அனுபல்லவி
துதித்திட பக்தி நல்கிடும் மலை நினைத்திட முக்தி தந்திடும் மலை
( ரமண மணம் )
சரணம்
காமனைக் கண்ணால் எரித்தவராம் காலனைக் காலால் உதைத்தவராம் வேலனை அன்பால் படைத்தவராம் பாலனை தன்பால் ஈர்த்தவராம்
( ரமண மணம் )
விசார மார்க்கம் காட்டியவராம் விகார மனமாசு நீக்குபவராம் அக்ஷர மணமாலை சூடியவராம் ரக்ஷக அருள் புரிபவராம்
( ரமண மணம் )
|
|