|
Post by Amritha Varshini on Dec 3, 2023 6:33:17 GMT 5.5
உ
ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல் ( ஐப்பசி அனுஷம் – 2 / 14-11-2023 )
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் – மனோலயம் ; ரூபக தாளம்
பல்லவி
உடனிருந்து காத்தருளும் அன்பு வடிவமே அருமருந்து தந்தெமை காக்கும் தெய்வமே
அனுபல்லவி
நோய் நொடிகள் போக்கிடும் வைத்யநாதனே கரம் தந்து காத்திடும் ஸ்வாமிநாதனே
( உடனிருந்து )
சரணம்
வழி மாறும் சிறு குழந்தை நானல்லவோ விழி காட்டி அருள் புரிவது நீயல்லவோ சிந்திக்கும் நல்லறிவு தந்தருளவோ மன்னித்து அருள் புரிய மனமில்லையோ
( உடனிருந்து )
ராகங்கள் இசைத்திடும் கீதமல்லவோ வேதங்கள் ஒலித்திடும் பரமனல்லவோ ஞானிகள் வணங்கிடும் தேவனல்லவோ ஏழையின் குரலுனக்கு கேட்கவில்லையோ
( உடனிருந்து )
|
|