|
Post by Amritha Varshini on Jun 11, 2023 6:03:25 GMT 5.5
உ
2023 வைகாசி அனுஷ ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் - ரேவதி ; ஆதி தாளம்
பல்லவி அன்பே உருவாய் அமர்ந்திடுவாய் அஞ்ஞான இருள் நீக்கி தந்திடுவாய்
அனுபல்லவி எண்ணங்களில் என்றும் நிறைந்திடுவாய் வண்ணங்களாய் வாழ்வை தந்திடுவாய் ( எண்ணங்களில் ) சரணம் பிரம்மமே வடிவெடுத்த ஸ்வாமிநாதனே தர்மத்தின் வழி நின்ற குருநாதனே அடியார்க்கு அருள்புரியும் அமுதசுரபியே அன்னையாய் அரவணைக்கும் காமாக்ஷியே ( எண்ணங்களில் )
|
|