|
Post by Amritha Varshini on Jan 18, 2023 4:36:12 GMT 5.5
Namaskaram ! Suprabhatham !!
We are glad to present a song on Sri Mahaperiyva today on the auspicious occasion of ANUSHAM. The song is tuned in two different ragas (Kethara Gowlai & Simendra Madhyamam) thanks to Smt Latha Sridharan and Smt Mohana Krishnan. The lyrics along with the YouTube link is shared below. Kindly hear and share your valuable feedback.
Sri Mahaperiyava Thiruvadi Saranam
Anand Vasudevan
Dharumamigu Chennai
18th Jan 2023 / Anusham
உ
பல்லவி
ஞானக்கனல் ஒன்று காஞ்சியில் இருக்குதாம் நம்
ஊனக்கண் திறக்க அது வழி செய்யுதாம்
அனுபல்லவி
தாயாய் தந்தையாய் கருணை புரியுதாம்
தரிசனம் செய்தவர் புண்ணிய சாலியாம்
( ஞானக்கனல் ஒன்று )
சரணம்
துறவறம் பெற்ற உயர் குருவடிவாம்
அறவழி பற்றிட நல்வழி காட்டுதாம்
நனவிலும் இமை போல் நம்மை காக்குதாம்
கனவிலும் நமக்கு நல்வழி காட்டுதாம்
( ஞானக்கனல் ஒன்று )
மாலைகள் சாற்றிட இன்பம் பெருகுதாம்
வெண்சாமரம் வீசிட துன்பம் விலகுதாம்
பொற்பாதம் வணங்கிட வாழ்வில் ஒளி வீசுதாம்
கற்பகத்தருவாய் அனைத்தும் நல்குதாம்
( ஞானக்கனல் ஒன்று )
இசையமைத்துப் பாடியவர் - திருமதி லதா ஸ்ரீதரன்
ராகம் - கேதார கௌளை ; ஆதி தாளம்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் - சிம்மேந்திர மத்யமம் ; ஆதி தாளம்
|
|