|
Post by Amritha Varshini on Oct 25, 2022 5:05:32 GMT 5.5
தெய்வத்தின் குரல்
நான் கொஞ்சம் ‘ஸாமர்த்யம்’தான் பண்ணி விட்டேன்! [ஏனென்றால்] நான் அவரிடம் சொன்னது half truth தான்! இன்னொரு half என்னவென்றால்: “விஷ்ணோச்ச ஹ்ருதயம் சிவ:” என்பதற்கு முன் பாதமாக அதே மந்த்ரத்தில் “சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு:” – என்று ‘சிவனுடைய இதயத்தில் விஷ்ணு இருக்கிறார்’ என்றும் இருக்கிறது.
அந்தத் தீவிர சிவபக்தரை ஸமாதானப்படுத்த ஸாதகமாக இருந்த ஒரு பாதியை மட்டும் சொல்லிச் சமாளித்து விட்டேன்! [அந்த] இரண்டு வாக்யமுமே நிஜந்தான்; [சிரித்து] இரண்டுமே full truth தான். [எவ்வாறெனில்] ஆடி, ஓடி நடக்கிற கார்ய சக்தி என்ற dynamic energy-க்கும் கார்யம் இல்லாமல், அசைவு இல்லாமல் சாந்தமாக இருக்கும் ஒரு nucleus – கருப் பொருள் – ஹ்ருதயம் என்று சொல்லக்கூடிய உள்பாகம் இருக்கவே செய்கிறது; அதே மாதிரி static என்று அசையாமல் stationary-யாக இருக்கப்பட்ட வஸ்துக்களுக்குள்ளும் ஹ்ருதய ஸ்தானத்தில் dynamic energy குமுறிக் கொண்டேதான் இருக்கிறது. Static Principle-ஐத்தான் சிவன் என்பது; Dynamic Principle-ஐயே விஷ்ணு என்பது.
|
|