|
Post by Amritha Varshini on Jun 7, 2022 7:23:07 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் - தோடி
பல்லவி
அனுஷ மஹோத்ஸவம் கொண்டாடுவோம் அனுஷ நாயகனின் அருள் பெறுவோம்
சரணம்
நூறாண்டுகள் நமக்காக வாழ்ந்த மஹான் அனுக்கிரஹம் செய்திடவே வந்த மஹான் தர்மநெறியில் வழுவாது நிலைத்த மஹான் வேதநெறி தழைத்திடச் செய்த மஹான்
( அனுஷ மஹோத்ஸவம் )
சொல்லாமல் நோக்கறியும் அற்புத மஹான் - குறை இல்லாமல் செய்திடும் இணையில்லா மஹான் முக்காலமும் உணர்ந்து அருளிடும் மஹான் எக்காலம்மும் நாம் தொழுதிடும் காஞ்சி மஹான்
( அனுஷ மஹோத்ஸவம் )
|
|