|
Post by Amritha Varshini on May 12, 2022 5:39:54 GMT 5.5
உ
சத்குரு ஸ்ரீ சிவன் சார் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - ஸ்ரீமதி சித்ரா ராகவன்
ராகம் – ஹம்சநாதம் / ஆதி தாளம்
பல்லவி
பிறவியிலே ஞானியாம் சத்குரு சிவன் சார்
அனுபல்லவி
துறவியாம் பெரியவா சொன்னதை அறிந்திடுவோம்
( பிறவியிலே ஞானியாம் )
சரணம்
எளிமையே உருவாய் நமக்காய் வாழ்ந்தார்
இனிமையாய் நமக்கு நல்லுரை பகர்ந்தார்
வாழ்வு சிறந்திட நல்வழி காட்டினார்
தாழ்வு நீங்கிட அருள்மழை பொழிந்தார்
( பிறவியிலே ஞானியாம் )
திருவுருவை கண்டால் பாவங்கள் பறந்திடும்
திருநாமம் சொன்னால் செல்வங்கள் பெருகிடும்
திருப்பாதம் பணிந்தால் கலிதோஷங்கள் விலகிடும்
திருத்தாள் வணங்கினால் கோடி நன்மை கிட்டிடும்
( பிறவியிலே ஞானியாம் )
|
|