|
Post by Amritha Varshini on Apr 11, 2022 5:22:03 GMT 5.5
உ
ராமாயணத்தைப் பற்றி ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பல்லவி
சீதாராம புண்ய சரிதம் ராமாயணம்
நாளும் செய்வோம் நாம் பாராயணம்
சரணம்
நாரதமுனி அருளிய ராமாயணம்
வேடன் முனியுரு ராமாயணம்
வேதப்பொருள் நிறை ராமாயணம்
காயத்ரி மந்த்ரசாரம் ராமாயணம்
வால்மீகி எழுதிய ராமாயணம்
லவகுசர்கள் பரவிய ராமாயணம்
துளசிதாச கவிமிகு ராமாயணம்
கம்பன் தமிழ் செய்த ராமாயணம்
இலக்குவன் உடனுறை ராமாயணம்
பரதன் பத்திநிறை ராமாயணம்
சடாயு உயிர்த்யாக ராமாயணம்
அனுமன் ஆற்றல் மிகு ராமாயணம்
அகலிகை விமோசன ராமாயணம்
சபரி முக்தியுரு ராமாயணம்
குகன் உதவிய ராமாயணம்
விபீடண சரண்புகு ராமாயணம்
தந்தை சொல் காத்த ராமாயணம்
தர்மத்தின் வழிச்சென்ற ராமாயணம்
பாதுகை ஏற்றமிகு ராமாயணம்
பக்தர்கள் மனமுருகும் ராமாயணம்
|
|