|
Post by Amritha Varshini on Jan 11, 2022 6:14:22 GMT 5.5
உ ஸ்ரீ ஆண்டாள் மீது ஓர் தமிழ்ப் பாடல் ராகம் – ராகமாலிகா ( பாகேஸ்ரீ / கமாஸ் / சஹானா )
பல்லவி
ஆண்டாள் நம் மனதை எல்லாம் ஆண்டாள்
அனுபல்லவி
பெரியாழ்வார் பெற்ற கண்மணியாம் சங்கத்தமிழ் வளர்த்த நல்மணியாம்
( ஆண்டாள் நம் மனதை )
சரணம்
வண்ணமலர் பதுமை நம் ஆண்டாள் கண்ணனை மனதிலே கண்டாள் எண்ணமெல்லாம் அவனைக் கொண்டாள் திண்ணமே மணம் புரிவேன் என்றாள்
( ஆண்டாள் நம் மனதை )
சரணம்
பறை தரும் திருப்பாவை பாடினாள் மறை தரும் திருமாலைத் துதித்தாள் இறை தரும் தமிழ்மாலை சூடினாள் குறைவின்றி வாழ நல்வழி காட்டினாள் ( ஆண்டாள் நம் மனதை )
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - திருமதி நிஹாரிகா ஸ்ரீகாந்த்
|
|