|
Post by Amritha Varshini on Aug 7, 2021 5:43:31 GMT 5.5
உ
ராகம் – ஹம்ஸநாதம்
பல்லவி
பெரியவா பொற்பாதமே துணை - மஹா
அனுபல்லவி
அலைந்து திரிந்துழலும் நிலையில்லா வாழ்க்கையில் நமக்கு எப்போதும்
( பெரியவா பொற்பாதமே துணை )
சரணம்
வேதம் தழைத்திட மேதினியில் எங்கும் - அந்தணர் நாதம் ஒலித்திட தரணியில் பொங்கும் - நின் கீதம் இசைத்திட அவனியில் ஓங்கும் - மனம் பாதம் பற்றிட அமைதியும் நல்கும் – நமக்கு
( பெரியவா பொற்பாதமே துணை )
கோள்கள் யாவும் நன்மை செய்திடும் நாளும் நல்லவை நமைத் தேடி வந்திடும் ஆளும் தீமைகள் விலகிச் சென்றிடும் - நின் தாளைப் பணிந்திட யாவும் நல்கிடும் – நமக்கு
( பெரியவா பொற்பாதமே துணை )
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்
soundcloud.com/amritha-varshini-836751731/5ovgrvcdmrcv
|
|