|
Post by Amritha Varshini on Aug 7, 2021 5:31:41 GMT 5.5
உ
ராகம் - ஆனந்த பைரவி
பல்லவி
நின் அருட்பார்வை வேண்டி உனைக் காண வந்தேனம்மா - ஸ்ரீ மஹாலக்ஷ்மி
அனுபல்லவி
கஷ்டங்கள் கவலைகள் யாவும் விரைவில் விலகி ஐஸ்வர்யம் பெருகவே
(நின் அருட்பார்வை)
சரணம்
நீலக்கடலில் தோன்றிய முழுமதியே நீலவண்ணன் மார்பில் உறையும் அருள்நிதியே பக்தர்களை காக்கும் அருள் அன்னையே துஷ்டர்களை அழிக்கும் பெரும் சக்தியே
(நின் அருட்பார்வை)
ஓரிடம் நில்லாமல் செல்லும் ஸ்ரீதேவியே நவ பக்திக்கு வசப்படும் நவநிதியே ஏழை எளியோர்க்கும் அருள் செய்திடம்மா வாழ்க்கைப் படகு செல்ல வழி காட்டிடம்மா
(நின் அருட்பார்வை)
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்
soundcloud.com/amritha-varshini-836751731/nin-arul-paarvai-sri-mahalakshmi
|
|