|
Post by Amritha Varshini on Aug 6, 2021 5:26:23 GMT 5.5
உ
ராகம் - ஹம்சானந்தி
பல்லவி
அம்மா காமாக்ஷி உனது கரிசனத்தை கொஞ்சம் என்னிடமும் கடாக்ஷி
அனுபல்லவி
இவ்வுலகில் யாதொரு உபாயமின்றி நீயே கதியென்று சந்நிதி அடைந்தேன்
( அம்மா காமாக்ஷி )
சரணம்
புவனம் அனைத்தும் நினது புன்னகையால் மலர்விக்கும் புவனேஸ்வரி உன் பதமலர் தனை தொழுவோர்க்கு அபயம் நல்கிட வேண்டுமம்மா
( அம்மா காமாக்ஷி )
அகில நாயகனுக்கு அன்னம் பாலித்து அருளிய அன்னபூரணியே இவ்வுலகினில் வறியோர் வயிறு என்றும் குளிர வேண்டுமம்மா
( அம்மா காமாக்ஷி )
ஆதிசங்கரர் போற்றிய காமாஷி நீயே பரமஹம்சர் துதித்த காளிகாம்பாள் நீயே அபிராமி பட்டர் பாடிய அந்தாதி நீயே காளிதாசனை பாட வைத்த அன்னையும் நீயே
( அம்மா காமாக்ஷி )
பாடல் - ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்
soundcloud.com/amritha-varshini-836751731/amma-kamakshi
|
|