|
Post by Amritha Varshini on May 15, 2019 6:40:40 GMT 5.5
Namaskaram
Have composed a song on Jagadguru Sri Adisankaracharya. The same was shared on Adisankara Jayanthi last week. Thanks to Smt Rukmini Srikrishna for tuning and singing. Please click the following URL to hear the song.
soundcloud.com/amritha-varshini-836751731/aud-20190508-wa0079
Pranams
Anand Vasudevan
ராகம் – கல்யாண வசந்தம்
பல்லவி
தொழுவோம் தொழுவோம் ஜகத்குருவினையே பணிவோம் பணிவோம் அவர் கழலிணையே
சரணம்
காலடியில் உதித்த ஞான தீபமே - நின் காலடி பணிவோர்க்கு அருள்நிதியே காலனை இடறிய பரம் பொருளே கால பயம் நீக்கும் மெய்ப் பொருளே
( தொழுவோம் தொழுவோம் )
சரணம்
கனகமழை பொழிவித்த காருண்ய மூர்த்தியே பாமழையில் துதித்த அத்வைதப் பொருளே வேதமழை பொழிவித்த குரு பீடமே- யாவரும் பூமழை தூவி வணங்கும் குரு மூர்த்தியே
( தொழுவோம் தொழுவோம் )
தொழுவோம் தொழுவோம் ஜகத்குருவினையே தொலையும் தொலையும் நம் பழவினையே பணிவோம் பணிவோம் அவர் கழலிணையே பெறுவோம் பெறுவோம் அவர் அருளினையே
( தொழுவோம் தொழுவோம் )
எழுத்து - ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
WhatsApp your feedback to 9582218808
|
|