|
Post by Amritha Varshini on Nov 21, 2015 18:37:07 GMT 5.5
நடமாடும் தெய்வமே ராகம் - ரேவதி | தாளம் - ஆதி
பல்லவி
நடமாடும் தெய்வமே உன்னை சரணடைந்தேன் அனுபல்லவி
ஆதாரம் ஏதுமின்றி உன் பாதார விந்தமதை
சரணம்
இந்த்ரிய சுகம் தன்னில் முத்துக்குளித்தேன் பற்றுக்கோடு இல்லாமல் சுற்றி திரிந்தேன்
பொருளே பெரிதென்று தேடி அலைந்தேன் வாழ்வின் அர்த்தம் புரியாமல் என்னைத் தொலைத்தேன்
யார் செய்த புண்ணியமோ உன்னை அடைந்தேன் வாழ்க்கை எனும் தத்துவத்தை அறிந்து கொண்டேன்
ஆனந்த் வாசுதேவன்
|
|